பாலகன் பிறந்த இனிய நாளான கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்….!! எப்படி கொண்டாடுவார்கள் தெரியுமா….?
இயேசு கிறிஸ்து பிறந்த நாளை தான் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறோம். இந்த கிறிஸ்துமஸ் விழாவை ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகிறோம். அமெரிக்காவில் டிசம்பர் 1ம் தேதி white christmas விழாவாக கொண்டாடப்படுகிறது. நாம் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறோம்.
கிறிஸ்துமஸ் கேரல் :
டிசம்பர் மாதம் துவங்கி விட்டாலே கிறிஸ்துமஸ் துவங்கி விட்டது என்று தான் அர்த்தம். கிறிஸ்தவ மக்களின் வீடுகள் எல்லாம் ஜொலித்து கொண்டு தான் இருக்கும். டிசம்பர் 10ம் தேதிக்கு மேல் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன், ஒவ்வொரு வீடுகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்.
பாலன் குடில் :
கிறிஸ்துமஸ் விழா என்றாலே பாலன் குடில் தான் நியாபகத்திற்கு வரும், இந்த பாலன் குடிலை கிறிஸ்துமஸ் துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பதாக ஆயத்த வேலைகள் துவங்கி விடுவார். இந்த குடிலில் மிகவும் பிரமாதமாக இருப்பது புற்கள் தான். 10 நாட்களுக்கு முன்பதாகவே புற்களை முளைக்க போட்டு விடுவார்.
மாட்டு தொழுவம் :
இயேசு பாலன் பிறந்தது மாட்டு தொழுவில் தான். இதனால் குடில் அமைக்கும் போது குடில் ஒரு மாட்டு தொழுவம் வடிவில் தான் இருக்கும். புற்கள் வளர்ந்த பின் அதில் இயேசு பாலன், மரியாள், யோசேப்பு, மேய்ப்பர்கள், மாடுகள் மற்றும் ஆடுகள் என உருவங்கள் வைத்திருப்பார்கள்.
கிறிஸ்துமஸ் மரம் :
சவுக்கு மரத்தை தான் கிறிஸ்துமஸ் மரம் என்று அழைப்பார்கள். இந்த மரத்தில் வண்ண விளக்குகளை எரிய விட்டு, அதில் ஸ்டார்களை தொங்க விடுவார்கள். இந்த ஸ்டார், இயேசு பிறந்த போது மேய்ப்பர்களுக்கு ஸ்டார் தான் வழிகாட்டியதாம். அதற்க்கு அடையாளமாக தான் ஸ்டார் பயன்படுத்தப்படுகிறது.