பிறக்கின்றது சார்வரி தமிழ் புத்தாண்டு : எச்சரிக்கும் பஞ்சாங்கம்.!

Default Image

தமிழ் புத்தாண்டு – சித்திரை 1ம் தேதி

ஆண்டுதோறும் ஒவ்வொரு தமிழ் மாத சித்திரை 1 (ஏப்ரல் 14ம் தேதி) தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் என்பதால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லாம் கோவில்களுக்கு சென்றும், வீட்டில் கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வழிபடுவர். மக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர்.

சார்வரி தமிழ் புத்தாண்டு :

சார்வரி தமிழ் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று ஏப்ரல் 13ம் திகதி 2020, பங்குனி 31ம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது. இதேவேளை, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று இரவு 7.26 மணிக்கு பிறக்கின்றது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய், குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். இது 60 ஆண்டுகளில் 34வது வருடம் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

சார்வரி ஆண்டு எப்படி இருக்கும்.? எச்சரிக்கும் பஞ்சாங்கம் :

இந்த சார்வரி ஆண்டில் மக்கள் நோயால் திரிவார்கள் என்றும் நாட்டில் மழை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் இருக்காது என கூறப்படுகிறது. பூமியில் நவதானியங்களின் விளைச்சலை பாதிக்கும். மேலும் மக்கள் உணவின்றி தவிக்கும் நிலைமை ஏற்படும். ஆனால் நவகிரகங்களின் சஞ்சாரத்தின் படி நல்ல பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. அதனால் இந்த சார்வரி புத்தாண்டில் மழை குறைவாக இருக்கும் என்றாலும் சித்திரை வருடப்பிறப்பு புதன்கிழமை வருவதால் நல்ல மழை பெய்யும் என்றும் ஆண்டின் முற்பகுதியில் உஷ்ணமும் பிற்பகுதியில் அதிக மழையும் பெய்யும் என்று சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே உலுக்கி வருகிறது. அதே போல பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டான சார்வரி ஆண்டிலும் புதிய நோய் தாக்கும் என பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :

எது எப்படி இருந்தால் என்ன.! எல்லாரும் நல்லதே நினைப்போம்.! தமிழ் புத்தாண்டை, அனைவருக்கும் நல்வாழ்வு கிடைத்திட மகிழ்வோடு வரவேற்போம். கொரோனா பரவலில் சிக்கி தவிக்கின்ற நிலை மாறி, அமைதியும், நிம்மதியும் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம். மேலும் நாட்டு மக்கள் நலம் பெற, கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் காவல் துறையினா், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் நம்பிக்கையுடன் எதையும் எதிா்கொண்டு வரும் தமிழக மக்கள் ஆகியோருக்கு எங்கள் தினச்சுவடு சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

udhayanidhi stalin annamalai
annamalai ptr
gold price
Pakistan train hijack
dhanush ashwath
ab de villiers rohit sharma