மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் பில் கேட்ஸ்..? அந்த இடம் அவருக்கு பிடிக்கவில்லையாம்..
பில் கேட்ஸுக்கு தான் உலக பணக்காரர் வரிசையில் இருப்பது சுத்தமாக பிடிக்காதாம். மேலும், வருங்காலத்தில் தமது குடும்பம் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி செய்வதில் தான் ஈடுபாட உள்ளது எனப்தையும் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர் வரிசையில் எப்போதும் டாப் 10இல் சிக்கி கொள்கிரார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். இவரது ஒரு நிமிட வருமானம் மட்டுமே இந்திய மதிப்பில் 6 லட்சம் என கூறப்படுகிறது.
பில் கேட்ஸ் சொத்து மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் 8 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவர் மெலிண்டா என்பவரை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ஆரம்ப காலகட்டத்திலேயே பில் கேட்ஸ் – மெலிண்டா இணைந்து அறக்கட்டளை உருவாக்கி லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
அண்மையில் தான் தனது மனைவி மெலிண்டாவை பிரிந்தார். அவருக்கு ஜீவனம்சாமாக 1 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருந்தார். இருந்தும், மீண்டும் இணைந்தே தொண்டு நிறுவனங்களை கவனித்து வருகின்றனர்.
அண்மையில் பில் கேட்ஸ் பேசுகையில், அவருக்கு உலக பணக்காரர்கள் வரிசையில் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை என்பதும், அவரது குடும்பம் வருங்காலத்தில் தொண்டு நிறுவனங்களில் மட்டும் தான் செயல்பட உள்ளனர் என்பதும், வருங்காலத்தில் மொத்த சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு எழுதி வைக்கவும் அவர் யோசித்து வருகிறார் என்பதும் ஓரளவு தெரிய வந்தது.