மோடிக்கு குளோபல் கோல் கீப்பர் விருது வழங்கிய பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் !
பிரதமர் மோடிக்கு மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் “பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன்” என்ற அமைப்பின் சார்பாக குளோபல் கோல் கீப்பர் விருது வழங்க பட்டது.
தூய்மை இந்திய எனும் சுகாதார திட்டத்தை வெற்றிகரமாக செய்ததற்காக பில் கேட்ஸ் அவருக்கு குளோபல் கோல் கீப்பர் எனும் விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
அந்த நிகழ்வில் பேசிய மோடி , இந்த விருது எனக்கானது அல்ல.தூய்மையை கட்டிப்பிடித்து வரும் கோடான கோடி மக்கள் மக்களுடையது என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் , இந்த விருதை 130 கோடி மக்களுக்காக சமர்ப்பிக்கிறேன் என்று அவர் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் ஆண்டான இந்த வருடத்தில் இந்த விருதை வாங்குவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் மூலம் 11 கோடி கழிப்பறைகள் கட்டபட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகள் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.