தளபதி-65 படத்தில் கார் சேஸிங் சீன் ஒன்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகி பாபு மற்றும்VTV கணேஷ் ஆகியோரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ரஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும் இந்த படத்திற்காக விஜய் இரண்டு மாதம் கால்ஷீட் கொடுத்து உள்ளதாகவும்,இரண்டே மாதங்களில் படத்தினை எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏப்ரல் மாதத்திலிருந்து துவங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை சில நாட்கள் மும்பையிலும் ,அதன் பின் சில நாட்கள் துபாயிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது .மேலும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கார் சேஸிங் சீன் உள்ளதாகவும் ,அது துபாயில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் ஸ்டைலான நகர்ப்புற தன்மை கொண்ட கதாபாத்திரமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…