தாறுமாறாக பைக் ஒட்டிய தல அஜித்! தல ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்!
தல அஜித் நடிப்பில் அடுத்ததாக நாளை மறுநாள் வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார். போணிக்கப்பூர் தயாரித்து உள்ளார். பாலிவுட்டில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் ரீமேக் தான் இது என ரசிகர்களுக்கு தெரியும்.
இந்த படத்தின் பிரீமியர் காட்சி திரை விமர்சகர்களுக்காக பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதனை பார்த்து விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
முக்கியமாக படத்தில் அஜித்துக்காக சண்டை சூப்பரான சண்டை காட்சி உள்ளதாம். அது மட்டுமில்லாமல் படத்தில் ஒரு பைக் சேசிங் கட்சியும் உள்ளதாம். அதில் தல அஜித் பைக்கில் வீலிங் எல்லாம் செய்து மிரட்டியுள்ளாராம். படத்தில் இந்த காட்சி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் என விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.