மரியாதை குறைவாக அஜித்தை பேசிய பிக்பாஸ் பிரபலம்.! கொந்தளித்த ரசிகர்கள்.!

Published by
Ragi

மரியாதை குறைவாக அஜித்தை பேசியதால் மீராமிதுனை கேட்டு அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு. 

மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் .

சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளாவதே இவரது வழக்கம். சமீபத்தில் கூட அரசு சரியில்லை என்றும், சுகாதார துறை அமைச்சரை விமர்சனம் செய்தும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். 

இந்த நிலையில் தற்போது அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இதுவரை யாரும் பார்த்திராத அஜித்துடன் இணைந்து நடித்த படத்திலுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆம், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளாராம் மீரா மிதுன். அதில் அவர் பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் என்றும், நீங்கள் என்னை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆம் எனது முதல் படம் அஜித் தவிர வேறு யாருடனும் இல்லை, ஆனால் எனது காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது என்று பதிவிட்டிருந்தார். இதற்கு அஜித் ரசிகர்கள் பலரும் காண்டாகி கொந்தளித்து விட்டனர். அவரு எவ்வளவு பெரிய ஆளு, பெயரை சொல்லி கூப்பிட்டுற, அவர் என்ன உனக்கு தமிபியா, சார் என்று அழைத்து மரியாதை கொடுத்து பேசு என்றெல்லாம் கமென்ட் செய்து மீரா மிதுனை விளாசி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

44 seconds ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

46 minutes ago

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…

1 hour ago

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…

1 hour ago

ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?

பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…

2 hours ago

தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK.! வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…

3 hours ago