திருச்சி தஞ்சாவூர் ஏரியாக்களில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா?! அசரடிக்கும் தளபதியின் பிகில்!
தளபதி விஜயின் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாலும், பெண்கள் கால்பந்து போட்டியினை பற்றி படம் இருப்பதும், நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடிப்பதாலும் படத்தின் மீது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இதனால் இப்பட வியாபாரம் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கிறது. திருச்சி, தஞ்சாவூர் ஏரியாக்களில் 9 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாம். இதுவரை எந்த திரைப்படமும் இந்த அளவிற்கு பெரிய தொகைக்கு விலைபோனதில்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது.