தளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா?! பிகில் அப்டேட்ஸ்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் ;பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்பட இசைவெளியீட்டு விழா வரும் வியாழனன்று நடைபெற உள்ளது.
அதனை இன்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அப்போது தளபதி விஜய் தனது பெண்கள் கால்பந்தாட்ட அணியுடன் கோச்சராக நிற்பது போல போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் நடிகை இந்துஜா, அம்ரிதா இன்னும் சிலரும் நிற்கின்றனர்.
இந்த கால்பந்தாட்ட அணியில் நடிகை அம்ரிதா, கையில் கேப்டனுக்கான பேட்ஜ் அணிந்துள்ளார். அதனால் அவர்தான் இந்த அணியின் கேப்டன் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.