இந்த காட்சியும் காப்பியா?! வீடியோ மூலம் மீண்டும் அட்லீயை கலாய்த்து வரும் நெட்டிசன்கள்!
தளபதி விஜய் நடிப்பில் இந்த வருட தீபாவளி முன்னிட்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இது போக அந்த படத்தில் முக்கிய காட்சிகள் சில பாலிவுட் ஹாலிவுட் படங்களின் காட்சிகளோடு ஒப்பிட்டு இயக்குனர் அட்லீயை கிண்டல் செய்து வருகின்றனர்.
பிகில் படத்தில் விஜய், கால்பந்தாட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, கோல்போஸ்ட்டில் முழுவதும் மறைத்து நான்கு பக்க மூலைகளில் சிறிய வழி வைக்கப்பட்டு அதற்குள் பந்தை அடிக்க வேண்டும். இல்லையென்றால் டீமில் உள்ள அனைவரும் 10 ரவுண்ட் ஓட வேண்டும். என கூறி பயிற்சியளிப்பார்.
தற்போது வைரலாகி வரும் விடியோவில் அதே நிலைதான் கால்பந்தாட்டத்திற்கு பதிலாக இங்கு கைப்பந்து ( வாலிபால்) குறிப்பிட்ட இடத்தில் பந்தை அடிக்க வில்லை என்றால், டீமில் உள்ள அனைவரும் ஓட வேண்டும் என பயிச்சியாளர் பயிற்சியளிப்பார்.இந்த வீடீயோவை வைத்து இயக்குனர் அட்லீயை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஈவு இரக்கமே இல்லையா @Atlee_dir நண்பா ..
pic.twitter.com/D1t0w23JQg— Senthil ❤ (@RageMaxxx) November 17, 2019