"பிகில்" திரைப்படத்தின் வழக்கு நாளை ஒத்திவைப்பு..!

Default Image

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில் ” இப்படத்தில் நயன்தாரா விவேக் ஆகிய பலர் நடித்துள்ளனர்.படத்திற்கு  ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்தய்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம்  வருகிற 25-ம் தேதி தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில்  “பிகில் ”  திரைப்படத்தின் கதை என்னுடையது எனக் கூறி கே.பி.செல்வா என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு காப்புரிமை சம்பந்தப்பட்டது என்பதல்  உயர்நீதிமன்றத்திற்கு செல்லுமாறு உரிமையியல் நீதிமன்றத்தில் கூறியது. இதை தொடர்ந்து கே.பி.செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படக்குழு சார்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் கொடுத்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என கூறி வழக்கை நாளை ஒத்திவைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்