ரிலீசிற்கு முன்பே 220 கோடி சம்பாதித்த பிகில் தயாரிப்பு தரப்பு!? மிரளவைக்கும் வியாபாரம்!

Default Image

தளபதி விஜய் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அட்லீ இப்படத்தை இயக்கியுள்ளார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடைபெற்று வருகிரது. இப்படத்திற்க்கான தியேட்டர் உரிமை மட்டும் தமிழ்நாடில் 83.55 கோடியும், ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் 10 கோடிக்கும், கர்நாடகவில் 8.5 கோடிக்கும், மேலும் மற்ற இடங்களில் 1 கோடிக்கும் என இந்தியாவில் மொத்தமாக 106.55 கோடிக்கு பிகில் படம் தியேட்டர் வியாபாரம் நடைபெற்றுள்ளதாம்.
அதே போல வெளிநாடுகளுக்கு 30 கோடிக்கு தியேட்டர் வெளியீட்டு வியாபாரம் ஆகியுள்ளது.  உலகம் முழக்க பிகில் தியேட்டர் வியாபாரம் 136.55 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
அது போக இசை உரிமை, சாட்டிலைட் உரிமை, இணையதள வெளியீட்டு உரிமை, ஹிந்தி ரைட்ஸ் என பிகில் திரைப்படம் மொத்தமாக 215 கோடி முதல் 220 கோடி வரை ரிலீசிற்கு முன்னரே சம்பாதித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்