தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் தளபதி விஜய்க்கு பிரமாண்ட வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் வைத்து நடைபெற்றது. அதற்கும் பல பிரச்சனைகள் எழுந்தன.
இந்நிலையில் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு முதலில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கினில் தான் படக்குழு கேட்டார்களாம். ஆனால், விஜய் அரசியல் பேசுவார் அதனால் பிரச்சனைகள் எழும். ஆகவே அந்த இடத்தை தர முடியாது என கூறி விட்டனர் எண்வும், அதனால்தான் சென்னைக்கு வெளியிலுள்ள தாம்பரத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அண்மையில் நடைபெற்ற உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் நடைபெற்றது. அங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் என இருவருமே அரசியல் பேசினார். அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து நேரடியாகவே தனது கருத்தை மேடையில் கூறினார். உலகநாதன் அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். மேலும், சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. கண்டிப்பாக அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மேடையில் அரசியல் பேசுவார் என கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே அரசியல் பேசக்கூடியவர்கள். அவர்களுக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஏனோ பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…