அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல தளபதி விஜய் தனது மாஸான பேச்சினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அவர் பேசுகையில் பஞ்ச் வசனங்கள் கூறி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அடுத்ததாக, எனது பேனரை கிழிங்க, எனது போட்டோவை கிழிங்க ஆனால், எனது ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள். என கேட்டுக்கொண்டார். மேலும், பேனரால் இறந்துபோன சுபஸ்ரீ குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துவிட்டு, யார் மீது பழி போட வேண்டுமோ அவர்கள் மீது பழி போடாமல், பேனர் கடைக்காரர், மீதும் லாரி டிரைவர் மீதும் பழி போடுகின்றனர் என குற்றம் சாட்டினார்.
மேலும், சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள். நல்ல விஷயங்களுக்காக ஹேஸ்டேக் உருவாக்குங்கள் என ரசிகர்களுக்கு செல்லமாக அட்வைஸ் செய்தார். மேலும், கால்பந்தாட்டம் போலவே நீங்கள் கோல் போட நினைக்கையில் உங்களைத் தடுக்க ஒரு கூட்டமே இருக்கும். சிலர் சேம் சைடு கோல் போடுவார்கள் அத்தனையும் மீறி வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார். அரசியலில் புகுந்து விளையாடுங்கள். ஆனால், விளையாட்டில் அரசியலை புகுத்தி விடாதீர்கள் என தனது அசத்தலான பேச்சின் மூலம் ரசிகர்களை கொண்டாட வைத்தார்.
பிகில் படத்தில் அவர் பாடிய வெறித்தனம் பாடலை மேடையில் பாடி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அவர் பேசுகையில் அரங்கம் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கரவொலி எழுப்பி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…