இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட 5000 கிலோவுக்கும் மேல் எடைக்கொண்ட குண்டு வெடித்தது!

5000 கிலோவுக்கும் மேல் இருக்கும் வெடிகுண்டை செயலிழக்கும் முயற்சியின் பொது வெடித்து சிதறியது.
இரண்டாம் உலக போரின்போது வீசப்பட்ட குண்டுகள், பல இடங்களில் வெடிக்காமல் போனது. அந்தவகையில், போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அது, 1945 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டினரால் வீசப்பட்டதாகவும், 5000 கிலோவுக்கும் மேல் எடைகொண்டுள்ளதாகவும், இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட மிகப்பெரிய குண்டுகளில் இதுவும் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது.
நீருக்குள் இருந்த அந்த வெடிகுண்டை செயலிழக்கும் முயற்சியினை போலந்து நேவி (கடற்படையினர்) தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இதன்காரணமாக அந்தப்பகுதியில் உள்ள மக்களை அவர்கள் வெளியேற்றினார்கள். வெடிகுண்டை செயலிழக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்தது.
இதனால், கால்வாயின் மேல் பல மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் அலை போல எழுந்தது. அந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த குண்டு வெடிப்பு காரணமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியானது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025