BIGGBOSS 5 : வீட்டிற்குள் இரண்டாம் நாள் …., என்ன நடந்தது தெரியுமா…?

Published by
Rebekal

பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாம் நாளாகிய இன்று போட்டியாளர்கள் என்ன செய்தார்கள், பிக் பாஸ் என்ன விதமான டாஸ்குகளை கொடுத்தார் என்பது குறித்து இங்கு அறியலாம் வாருங்கள்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று இரண்டாம் நாள். இன்று அதிகாலையிலேயே நிரூப், அண்ணாச்சி, ராஜு மூன்று பேரும் எழுந்து ரைஸ் செய்து சாப்பிட்டுள்ளார்கள். அதன் பின் 8 மணிக்கு வழக்கம் போல பாட்டு போட்டதும் அனைவரும் எழுந்து சிறிது நேரம் நடனமாடி விட்டு காலையிலேயே ஜாலியாக பேசி  சிரிக்கின்றனர். பின் நம்ம ராஜு அனைவருக்கும் யோகா செய்வது எப்படி என சொல்லி கொடுக்கிறார்.

அதன் பின் அனைவரும் விளையாடி கொண்டிருக்கையில் பிக் பாஸ் சிபியை கான்ஃபெஸ்ஸன் அறைக்கு அழைத்து அவரது முன்னாள் இருக்கும் புத்தகத்தை அனைவர் முன்னிலையிலும் வாசித்து காண்பிக்க சொல்கிறார். அது போல சிபியும் அனைவருக்கும் அதை வாசித்து காண்பிக்கிறார். அதில் போட்டியாளர்கள் தங்கள் கடந்து வந்த காலத்தை குறித்து கூறுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டியாளர்களின் கதைகளுக்கான வாழ்த்துக்களையும் காந்தம் போன்ற ஸ்மைலி வடிவத்தில் அனைவரும் வெளிப்படுத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இசை வாணியின் வாழ்க்கை ….

இசை வாணி முதலாவதாக அழைக்கப்பட்டு தனது கடந்து வந்த பாதை குறித்து கூறுகிறார். அப்பொழுது தான் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் வளர்ந்ததாகவும், பள்ளி சென்றுவிட்டு வந்து மாற்றிக்கொள்ள கூட உடை இல்லாத நிலையில் தான் இருந்ததாகவும், அதன் பின் தனது சிறுவயது முதலே தந்தையுடன் பாட்டு கச்சேரிகளுக்கு சென்று சிறிது சிறிதாக உழைத்து தனது தாயிடம் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் தற்பொழுது நான் எனது வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து அதன் பின்பதாக பாடல் மூலமாக ஒரு வருமானத்தை ஈட்ட  ஆரம்பித்தேன். அதன்பின் கானா பாடல் பாடியது பலரையும் கவர்ந்தது. எனவே தொடர்ச்சியாக கானா பாடலை பாடி வருகிறேன். இதன் மூலம் நான் தற்பொழுது என் குடும்பத்திற்கு தேவையான அளவு வருமானத்தை ஈட்டி வருகிறேன் எனவும் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் கானா பாடல் பாடுவதால் என்னை இகழ்ந்தவர்கள் முன், தனக்கு பெருமையான அவார்டு ஒன்று கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரது இந்த வாழ்க்கை கதைக்கு அனைவருமே தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இவருக்கு ஒரு எதிர்ப்பான ஸ்மைலி கூட கொடுக்கப்படவில்லை. மேலும் இவர் இந்த கதை கூறி முடித்ததும் இவரை அழைத்துப் பேசிய ராஜு, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கூறுகிறீர்கள். தற்பொழுது நல்ல நிலைமைக்கு வந்து விட்டீர்கள். எனவே நீங்கள் கலக்கத்துடன் கூறியிருக்கக் கூடாது என அறிவுரை கூறினார். அதை இசை வாணி ஏற்றுக் கொள்கிறார்.

பின் அபிஷேக், அபினை, வருண், சிபி நான்கு பேரும் அமர்ந்து பேசுகையில், அபிஷேக் ஒவ்வொருவரது குணம் குறித்தும் கூறுகிறார். சிபி எது நடந்தாலும் பரவாயில்லை என்பது போல நடந்து கொள்வதாக அபி கூறுகிறார். இதை கேட்டதும் சிபி லேசாக கோவம் வருவது போல தண்ணீரை குடிக்கிறார், ஆனால் எதையும் காட்டி கொள்ளவில்லை. அதன் பின் அபினை குறித்து கூறுகையில் ராஜ பரம்பரையாக இருந்தாலும் பதவிக்கு ஆசைப்படாதவர் என கூறுகிறார்.

அதன் பின் உள்ளே நிரூப் மற்றும் ப்ரியங்கா தங்கள் தலைமுடியை விரித்து ஆட, அதற்கு தாமரை செல்வி பாட்டு பாட அனைவரும் ஜாலியாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். கடந்து வந்த பாதையில் கூறவேண்டியதை அபிஷேக் போட்டியாளர்களிடம் சும்மா அமர்ந்து பேசும் போதே கூறி அழுகிறார். அனைத்து போட்டியாளர்களும் அபிஷேக்கை சமாதானம் செய்கின்றனர். அதன் பின் சின்ன பொண்ணு அக்கா தனது வாழ்க்கை நிகழ்வை கூறுகிறார்.

சின்ன பொண்ணுவின் வாழ்க்கை …

தான் சிறு வயதில் கஷ்டப்பட்டு வளர்ந்ததாகவும், தனது வாழ்நாளில் நெல் அரிசி உணவையே சாப்பிட்டது மிக குறைவு எனவும், தனது பள்ளி மாணவர்களிடம் தான் கொண்டு செல்லும் கூழை கொடுத்துவிட்டு, யாரிடமாவது நெல் அரிசி சோறு சாப்பிடுவன் எனவும், பனம்பழம் தான் பல நாள் உணவு எனவும் கூறியுள்ளார். இளம்வயதில் கொஞ்சம் கொஞ்சமாக பாடியதாகவும், திருமணத்திற்கு பின் கணவருடன் இணைந்து இன்னும் கலைத்துறையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இவருக்கு அனைவருமே, ஆதரவான ஸ்மைலி கொடுத்திருந்தாலும் ராஜு நீங்கள் உங்கள் கடந்து வந்த நிகழ்வை சொல்லும் பொழுது அழுதிருக்க கூடாது, நீங்கள் தைரியமாக இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் தற்பொழுது உங்கள் கலைநயத்தால் முன்னேறி விட்டீர்கள் என கூறி டிஸ்லைக் கொடுத்துள்ளார், அதையும் புரிந்து கொண்டு சின்ன பொண்ணு ஏற்றுக்கொள்கிறார்.

பின் அனைவரும் ஜாலியாக அமர்ந்து பேசி சிரிக்கின்றனர். இறுதியாக இசை வாணி பவானியிடம் தனது கஷ்டத்தை கூற, பவானி நீங்க விரும்பியாடி சென்னையிலேயே ஒரு வீடு வாங்குவீர்கள் என இசை வாணியிடம் கூறுகிறார். பின் இவர்களுடன் இமான் அண்ணாச்சியும் இணைந்து ஜாலியாக பேச இந்த நாள் நிகழ்வு முடிவடைகிறது.

Recent Posts

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

2 minutes ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

33 minutes ago

பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…

43 minutes ago

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

2 hours ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

3 hours ago