பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றாலும், ப்ரோமோவில் கெத்து காட்டும் கவின்! பங்கமாய் கலாய்த்த ஆண்டவர்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் போட்டியாளர் கவின் வெளியேறினார். பிக் பாஸ், ருபாய் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என கூற கவின் முன் வந்து 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார். போட்டியாளர்கள் எவ்வளவோ கூறியும் கவின் கேட்காமல் வெளியே சென்றார். இதில் லொஸ்லியா கவின் வெளியேற்றத்திற்கு பின்னர் அழுது கொண்டே இருந்தார்.
இன்று சனிக்கிழமை என்பதால், கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கவின் மேடையில் கமல்ஹாசன் முன்னிலையில் லொசுழியவி மரியாதையாக நீங்கள் என மரியாதையாக பேசி வருகிறார் அப்போது, ஆண்டவர் கமல்ஹாசன் குறுக்கிட்டு உள்ளே நீ, வா போ என கூறிவிட்டு தற்போது மரியாதையாக கூறுவதை கலாய்த்தார். அதற்க்கு கவின் இப்போ அவர்கள் பெற்றோர்கள் எல்லாம் பார்ப்பார்கள் என கூறி சமாளித்துவிட்டு சென்றார்.