பிக் பாஸ் மதுமிதா திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு! பரபரப்பு பேட்டி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார் போட்டியாளர் மதுமிதா. இதற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. பிக் பாஸ் வீட்டினுள் தற்கொலை முயற்சி செய்ததால் அவர் வெளியேற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று, விஜய் டிவி சார்பில், மதுமிதா சம்பள பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, ‘ எனக்கு கொடுக்க வேண்டிய வேண்டிய பணத்தினை கொடுத்து விடுவதாக விஜய் டிவி நிர்வாகம் ஏற்கனவே கூறிவிட்டது. இந்நிலையில் திடீரென எதற்காக என்மீது புகார் அளிக்கப்பட்டது என தெரியவில்லை.
இது குறித்து, விஜய் டிவியிடம் கேட்க, தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுவரை விஜய் டிவி நிபந்தனைக்கு உட்பட்டுதான் அனைத்தையும் செய்து வருகிறேன். அதற்க்குள் எதற்காக என்மீது புகார் அளித்தனர் என தெரியவில்லை.’ என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025