விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரத்தில் இணைந்த பிக் பாஸ்-3 பிரபலம்!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் முதலில் சூர்யா நடிக்க இருந்து பின்னர் கிடப்பில் போடப்பட்டு, பின்னர் விக்ரம் நடிப்பில் இப்படம் உருவானது.
அந்த படம் முக்கல்வாசி முடிவடைந்து விட்டது. இன்னும் க்ளைமேக்ஸ் பகுதி படமாக்கப்படவில்லை. இப்பட டீசர் ரிலீசாகி வருடக்கணக்கில் ஆகிவிட்ட நிலையில், தற்போது இப்பட ஷூட்டிங் வேலைகளை படக்குழு ஆரம்பிக்க உள்ளது.
இதில், புதிய வரவாக பிக் பாஸ் 3 புகழ் அபிராமி நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.