BIGG BOSS 5 : இந்த வாரம் எவிக்ஷினில் இருந்து காப்பாற்றப்பட்டவர் யார் ….?

இந்த வாரம் எவிக்ஷினில் இருந்து ப்ரியங்கா காப்பாற்றப்பட்டுள்ளதாக முதல் ப்ரோமோவில் கமல் சார் கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 28 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் திருநங்கை நாமிதா மாரிமுத்து வெளியேறினார். அதை தொடர்ந்து முதல் வாரம் நாதியா வெளியேற்றப்பட்ட நிலையில், 2-வது வாரம் அபிஷேக் வெளியேற்றப்பட்டார்.
தற்பொழுது வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஏற்கனவே இமான் மற்றும் இசைவாணி நேற்றே காப்பாற்றப்பட நிலையில் இன்று பிரியங்கா காப்பாற்றப்பட்டு உள்ளதாக முதல் ப்ரோமோவில் கமல் சார் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram