BIGG BOSS 5 : என்ன முதல் நாளே குழுவா சேர்ந்துட்டீங்க போல….! வீடியோ உள்ளே…!

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே பிரியங்கா குழுவாக சில பெண் போட்டியாளர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக பாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட 4 தமிழ் பிக் பாஸ் சீசன்களை அடுத்து, தற்பொழுது ஐந்தாவது சீசன் நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் வழக்கம் போல கமல் தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக், நமிதா, பிரியங்கா, சின்ன பொண்ணு, வருண், இமான் அண்ணாச்சி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரைச்செல்வி, சிபி, நிரூப், ஜக்கி பெர்ரி, நதியா சாங், பவானி, அபினை ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல் அல்லாமல் இந்த முறை 18 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் போட்டியில் கலந்து கொண்ட முதல் நாளே, பல கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள பிரியங்கா நான்கு பெண்களுடன் சேர்ந்து, ராப் பாடகி ஜக்கி பெர்ரி தலைமையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் முதல் நாளே குழுவாக சேர்ந்து விட்டார்களோ எனவும் ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram