BIGG BOSS 5 : சைலன்ஸ்…., சைலன்ஸ்…. அட நம்ம சஞ்சீவா இது …!
பிக் பாஸ் வீட்டில் வழக்கம் போல போட்டியாளர்கள் சண்டையிடும் பொழுது சஞ்சீவ் சைலன்ஸ் என சத்தமிட்டு போட்டியாளர்களை வாயடைக்கவைத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றும் போட்டியாளர்கள் வழக்கம் போல செய்தி வாசிக்கும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
அதில் பிரியங்கா, வருண், அபிஷேக் ஆகியோர் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது, சஞ்சீவ் சைலன்ஸ் என சத்தமாக கூறியுள்ளார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் வாயடைத்து போய் நின்றுள்ளனர். இதோ அந்த வீடியோ,