BIGG BOSS 5 promo 2 : நீங்க 400 குழந்தைகளை கூட வளர்ப்பீங்க.., கோபமடைந்த நமிதா!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தாமரை செல்வியின் பேச்சால் கோபமடைந்த திருநங்கை நமிதாவின் வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 4 வது நாள் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருநங்கை நமிதா அவர்கள் தான் கடந்து வந்த பாதை குறித்து மிகவும் கண்ணீருடன் நேற்றைய நிகழ்ச்சியில் கூறியிருந்தார்கள். போட்டியாளர்கள் அனைவருமே அவருக்கு ஆதரவாக பேசி வந்தனர்.
அப்பொழுது போட்டியாளர் தாமரைச்செல்வி நமிதாவை பார்த்து நீங்கள் 40 அல்ல 400 குழந்தைகளை வேண்டுமானாலும் வளர்ப்பீர்கள் என சிரித்துக்கொண்டே கூறியதாகவும், இதனால் நான் விட மாட்டேன் எனவும் நமிதா கூறுகிறார். இதனால் நமிதா சற்று கோபம் அடைந்துள்ளார்.
இது குறித்து இமான் அண்ணாச்சியிடம் தாமரைச்செல்வி கூறுகிறார். நான் இவ்வாறு கூறினேன், அதற்கு மன்னிப்பும் கேட்டு விட்டேன். ஆனால் அவர்கள் கோவப்பட்டு விட்டார்கள் என்று கூறுகிறார். அதற்கு அண்ணாச்சி நமிதா இங்கே வாருங்கள் என்று கூப்பிட்டதற்கு, நமிதா நான் அங்கு அமர வரவில்லை கோபித்துக் கொள்ளாதீர்கள் என்று கூறுகிறார். இரண்டாவது ப்ரோமோ விடியோ இதோ,
View this post on Instagram