BIGG BOSS 5 : நிரூப்… ஐக்கி உன் பிரண்டுனா, நான் யாரு …?
ஐக்கி உனக்கு பிரண்டுனா, நான் உனக்கு யாரு என நிரூப்பிடம் ப்ரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே நிரூப், ப்ரியங்கா, அபிஷேக் ஆகிய மூவரும் குழுவாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் அபிஷேக் வெளியேற்றப்பட்ட பின்பு நிரூப்பும் பிரியங்காவும் ஒன்றாக விளையாடினர்.
சில நாட்களாக நிரூப் பிரியங்காவிடம் இருந்து விலகியே இருந்தார். தற்பொழுது நேற்றைய நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க்கில் ஐக்கியுடன் இணைந்து நிரூப் விளையாட ஆரம்பித்தார். இது தனக்கு பொறாமையாக உள்ளதாக பிரியங்கா கூறியுள்ளார். மேலும், ஐக்கி யார் என கேட்க அவள் எனது பிரண்டு என நிரூப் கூறுகிறார். அப்ப நான் யாரு என பிரியங்கா கேள்வி கேட்கிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram