BIGG BOSS 5 : இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா…?
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சுருதி தான் வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 35 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், நமீதா தானாகவே வெளியேறினார். அதன் பின்னதாக நாதியா, அபிஷேக், சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது இந்த வாரம் எவிக்ஷனில் சில போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் சுருதி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார் என கூறப்படுகிறது.சுருதி ஏன் வெளியேற்றப்பட்டார் என பலர் மத்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. வெளியேற்றப்பட்டது உண்மையில் சுருதி தானா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.