BIGG BOSS 5 : மாட்டுல பால் கறக்க சொன்னா மாட்டையே உடைச்சிட்டிங்களேமா ….!
பிக்பாஸ் வீட்டிற்குள் இரு குழுக்கள் பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து பால் கறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து பால் கறக்க வேண்டுமென டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்குக்காக செயற்கையான ஒரு மாடு கொடுக்கப்பட்டது. ஆனால் போட்டியாளர்கள் பால் கறக்கிறோம் என்ற பெயரில் மாட்டையே உடைத்து விட்டார்கள். இதோ அந்த புரோமோ வீடியோ,