BIGG BOSS 5 : எல்லாரையும் இன்னைக்கு அழ வச்சி பாக்கணும்னு நினைச்சிட்டீங்களா பாஸ் ….!

மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் வீட்டுக்குள் ஒளிபரப்பப்பட்டு உள்ளது.
இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது போல பிக்பாஸ் வீட்டிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் ப்ரோமோவிலேயே விஜய் டிவி பிரபலங்கள் சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அடுத்த ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு விருப்பமானவர்கள் பிடித்த உணவை சமைத்து அனுப்பியிருந்தார்கள். இதிலேயே ராஜு, அண்ணாச்சி பிரியங்கா ஆகியோர் அழுதார்கள். இந்நிலையில் தற்போது மூன்றாம் ப்ரோமோவில் வீட்டில் உள்ளவர்களின் குடும்பத்தினர் புகைப்படங்களை பிக்பாஸ் இல்லத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் அனைவருமே அழுதுள்ளார்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram