கமல் சார் போட்டியாளர்களுடன் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியான இன்று என்னவெல்லாம் நடந்தது என அறிய இங்கே காணுங்கள்.
கமல் சார் வருவதற்கு முன்னதாகவே திருநங்கை நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் பின்பதாக வந்த கமல் சார் நமிதாவின் வாழ்க்கை கதையால் நேயர்களை போலவே தானும் தனது மனதை பறிகொடுத்துள்ளதாகவும், அவர் இந்நிகழ்ச்சியில் தொடர விரும்பியதாகவும், அவர் வெளியேறியதை அறிந்து கொண்டேன், மேலும் அவர் வாழ்வில் முன்னேறி தொடர் வெற்றியடைய வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்பதாக கமல் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களிடமிருந்து நான் பல விஷயங்கள் கற்றுக்கொண்டு வருவதாகவும், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடந்த ஒரு வாரம் வீட்டில் இருந்தது குறித்தும் பேசியுள்ளார்.
நிரூப்: வீட்டில் ஜிம் இல்லை என்பதால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல வீட்டுக்குள் அம்மிக்கல் வைத்து உடற்பயிற்சி செய்த நிரூபை பாராட்டியுள்ளார்.
பிரியங்கா : சமையல் கருவி மூலமாக சுட சுட செய்திகள் சொல்லுவதாக பிரியங்காவை கலாய்த்துள்ளார்.
வருண் : இங்கு மேஜிக் காட்டி சென்ற வருண் உள்ளேயும் செய்து காண்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சிபி : வீட்டில் டீ போட ஆரம்பித்திருக்கும் சிபி காபியும் போட கற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
அபிஷேக் : வீட்டில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு காரணமாக இருந்த அபிஷேக் தான் எனவும், அவரை தூங்காதே தம்பி தூங்காதே என கூறியுள்ளார்.
அக்ஷரா : கட்டாந்தரையையும் யோகா தளமாக மாற்றி என்னையே வியக்கவைத்துள்ளார் என கூறியுள்ளார்.
பாவனி : தனது சொந்த குரலில் சின்ன திரையில் பேசிக்கொண்டிருக்கும் பாவனிக்கு வாழ்த்துக்கள். அவரது வாழ்வில் நிகழ்ந்ததற்கு ஆதரவு இரங்கல் தெரிவித்ததுடன், பாவனியின் மாமியார் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி : இங்கும் பாஸ்கெட் பால் வரும் என நினைக்க வேண்டாம், உங்கள் திறமையை காண்பிக்க தொடங்குங்கள் என கூறியுள்ளார். மேலும், ஸ்ருதி குடும்ப நிகழ்வு குறித்தும் ஆதரவாக பேசியுள்ளார்.
அபினை : மகளுக்கு மட்டுமே வந்தனம் சொல்லும் அபினை நிஜ வாழ்க்கையில் நடந்து கொள்வது போல உழவுக்கும் வந்தனம் கூறுங்கள், மக்களை நினைத்து கவலை கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.
இமான் அண்ணாச்சி : ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வெறியில் வட்டார மொழியை மறந்துவிடுவார் போல அண்ணாச்சி என கலாய்த்த கமல் சார், அவருக்கு கற்றுக்கொடுக்கும் ஐக்கிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐக்கி பெர்ரி : நீங்கள் தஞ்சாவூர் பெண் என்பதே வியத்தகு செய்தி, உங்கள் கதை அனைத்தும் சுவாரஸ்யமானது ஆனால், நீங்கள் சொல்லும் விதத்தில் சுவாரஸ்யம் குறைந்து விட கூடாது என கூறியுள்ளார்.
இசைவாணி : சொந்த வீடு வாங்க வேண்டும் என நினைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள், நமிதாவின் கதையை போலவே உங்கள் கதையும் எனது மனதை தொட்டது. இளைமையில் வறுமை என்பது சோகம் தான், ஆனால் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்ந்து கொண்டு வந்தால் யாரும் தடுக்க முடியாது.
தாமரை செல்வி : குறட்டை சத்தமே உங்களை தூங்க விடாமல் தடுக்கிறது என்றால், இன்னும் இந்த வீட்டில் அரட்டை சத்தம் கேட்க தொடங்கவில்லை. அப்போ என்ன செய்ய போகிறீர்கள் என கலாய்த்துள்ளார்.
மதுமிதா : குழல் இனிது, யாழ் இனிது என்பார் யாழ்ப்பாண தமிழ் அறியாதோர் என யாழ்ப்பாண தமிழில் பேசுவதாக மதுமிதாவை புகழ்ந்துள்ளார்.
சின்ன பொண்ணு : பெயரை சின்ன பொண்ணு என வைத்து கொண்டு, அனைவருக்கும் மகிழ்ச்சியாக தாயாக மாறியிருக்கிறார் என கூறியுள்ளார். அவரது வாழ்க்கை நிகழ்வு குறித்தும் பேசியுள்ளார்.
நதியா சாங் : நாடி வந்தவர் மலேசியாவில் இருந்து வந்தவர் கொஞ்சம் முன்னாடி வாங்க என கூறியுள்ளார்.
ராஜு : எல்லா கதையிலும் திரை கதையை தேடி கொண்டு இருப்பதாக ராஜுவிடம் கூறியுள்ளார்.
இன்னும் வாழ்க்கை நிகழ்வு குறித்து கூறாத போட்டியாளர்களிடம் எவ்விதத்தில் உங்கள் கதையை கூற போகிறீர்கள் என கேட்டுள்ளார். மேலும், தேர்வில் தோல்வியடைவதால் தற்கொலை செய்து கொள்வதையும் சுட்டி காண்பித்து பேசியுள்ளார்.
அடுத்ததாக ராஜு சின்ன பொண்ணுவின் கதைக்கு டிஸ்லைக் கொடுத்தது குறித்தும், அதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் போட்டியாளர்களிடம் விளக்கி பேசியுள்ளார்.
அதன் பின்பதாக அனைவருக்கும் சாப்பாட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டுள்ளார்கள்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…