BIGG BOSS 5 : பொம்மைகளாக மாறிய போட்டியாளர்கள்…, பிரியங்கா வெளியேற்றம்!
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்க்கான லக்ஸரி பட்ஜட் டாஸ்க் குறித்த வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் குறித்த வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் போட்டியாளர்கள் அனைவரும் பொம்மைகளாக தங்களை அலங்கார படுத்திக்கொண்டு, பிறருக்காக விளையாட வேண்டும். நீயும் பொம்மை, நானும் பொம்மை, தெரியும் உண்மை எனும் இந்த போட்டியில் இருந்து பிரியங்கா வெளியேற்றப்பட்டுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram