BIGG BOSS 5 : அவங்க பேசறதை மட்டும் தான் எப்போவும் கேட்கணுமா….!
வாழ்க்கையில் ப்ரியங்காவிற்கு வேறு வேலையே கிடையாதா என அக்ஷரா வருணிடம் கேட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு சில டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் முன்னதாக ராஜூவுக்கும் அக்ஷராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து தற்பொழுது ப்ரியங்காவின் பேச்சால் அக்ஷரா பாத்ரூமில் அமர்ந்து வருணிடம் பேசுகிறார். இதோ அந்த வீடியோ,