வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரையிலும் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்.!

Default Image

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் 16’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனையடுத்து சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் இரட்டு அறையில் முரட்டு குத்து என்ற தமிழ் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அதன் பின்னர், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார். அதனால் பிரபலமான யாஷிகா தொடர்ந்து பல கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தார். தற்போது பிக்பாஸ் பிரபலமான மகத்துடன் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் சின்னத்திரையிலும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான ‘ரோஜா’ என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யாஷிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடிக்கும் இந்த தொடரில் வடிவுக்கரசி, ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஊரடங்கு முடிந்த பின்னர் யாஷிகாவின் காட்சிகள் ஒளிப்பரப்பாகும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்