56வயதிலும் கை, கால்களை வளைத்து யோகா செய்யும் பிக்பாஸ் பிரபலம்.!
பிக்பாஸ் பிரபலமான பாத்திமா பாபு தனது உடலை ஃபிட்டாக வைப்பதற்கு கை கால்களை வளைத்து யோகா செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
செய்தி வாசிப்பாளராக மீடியாவில் அறிமுகமானவர் பாத்திமா பாபு. அதனையடுத்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தார். தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்தும், சமையல் செய்தும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 56வயதிலும் உடலை ஃபிட்டாக வைப்பதற்கு கைது கால்களை வளைத்து யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் இந்த வயதில் எப்படி இவ்வாறு செய்ய முடிகிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். யோகா வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்தது மட்டுமில்லாமல் டிக்டாக் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.