ஒன்னு கூடிட்டாங்கயா.. ரவுண்ட் கட்டி ரியோவிடம் கேள்வி கேட்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!
ரியோவிடம் சனம்,ரம்யா, ஷிவானி என பலரும் ரவுண்ட் கட்டி கேள்விகள் எழுப்ப ரியோ தலையை பிச்சு கொண்டு பைத்தியம் பிடித்தது போன்று மாறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு கால் சென்டராக மாறியுள்ளது.இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.அவ்வாறு வாடிக்கையாளர்கள் ஊழியரை வெறுப்பேற்றும் படி பேசி அவரே போன் காலை துண்டிக்கும் படி செய்ய வேண்டும்.
அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் நேருக்கு நேர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இதனால் பல சண்டைகளும் கடந்த இரு தினங்களாக நடந்து வருகிறது.முதலில் பிக்பாஸ் போட்டியாளர்களும் அனைவரும் சேர்ந்து ஆரியிடம் கேள்வி கேட்டு டார்கெட் செய்தனர் .இந்த நிலையில் இன்றைய செக்கன்ட் புரோமோவில் சனம் மற்றும் அனிதா இணைந்து ரியோவிடம் தாறுமாறாக கேள்விகளை எழுப்பினர் .
இதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது புரோமோவில் ரியோவிடம் ஷிவானி,ரம்யா ,சனம் என மாறி மாறி கேள்வி எழுப்பியும் ,அதனிடையில் சம்யுக்தா கேப்டனான ரியோவிடம் அனிதாவை குறித்தும் கூறி ரியோவை திக்கு முக்காட வைத்துள்ளார் . மொத்தத்தில் ரியோ தலையை பிச்சு கொண்டு பிக்பாஸ் வீட்டினுள் அலைகிறார் .
#Day53 #Promo3 of #BiggBossTamil #
பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/px1frsR17P
— Vijay Television (@vijaytelevision) November 26, 2020