போலீஸ் கேரக்டரில் ‘பிக்பாஸ்’ யாஷிகா.!வில்லனாக நடிப்பது இந்த பிரபல இசையமைப்பாளரா.?

Default Image

பிக்பாஸ் யாஷிகா நடிக்கும் சல்பர் எனும் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் இரட்டை அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . அதனையடுத்து பல படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் . தற்போது இவர் மகத் உடன் இணைந்து இவர் தான் உத்தமன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனுடன் எஸ்ஜே சூர்யாவுடன் கடமையை செய் எனும் படத்தில் நடித்து வருகிறார்..

இந்த நிலையில் தற்போது புது படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.’சல்பர்’ என்று டைட்டில் வைத்துள்ள இந்த படத்தில் யாஷிகா சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.புவன் என்பவர் இயக்கவிருக்கும் இந்த படத்தில் வில்லனாக பிரபல இசையமைப்பாளரான சித்தார்த் விபின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ட்ரோல் ரூமிலிருந்து வரும் அழைப்பு மூலம் கடத்தல் வழக்கு ஒன்றை யாஷிகா கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை என்றும் ,இன்று இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் ,சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 30 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இயக்குனர் புவன் தெரிவித்துள்ளார்.இதுவரை கிளாமர் வேடங்களில் யாஷிகாவை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் வித்தியாசமானதாக இருக்கும் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்