பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்க உள்ள பிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது . அடுத்த ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
மேலும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் மும்மரமாக செயல்பட்டு வருகிறார் .எனவே அதில் வெற்றி பெற்றால் பிக்பாஸ் 5-வது சீசனை தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ள உள்ளதாக சில பிரபலங்களின் பெயர்கள் சமூக ஊடகங்களில் உலாவி வருகிறது.அதன்படி பிக்பாஸ் 5-வது சீசனில் ஸ்ரீரெட்டி, சோனா, ராதாரவி, பழகருப்பையா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின், ஷிவாங்கி மற்றும் புகழ் ஆகியோரும் இந்த பிக் பாஸ் 5-வது சீசனின் போட்டியாளராக பங்கேற்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…