பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாண்டி சந்துரு இயக்கத்தில் உருவாகும் படத்தில் சாண்டி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
நடன இயக்குனரான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் ஹீரோவாக அவதாரம் எடுக்கவுள்ளார் . திரில்லர் கலந்த மர்மமான கொலை கதைக்களத்தை கொண்ட பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிக்பாஸில் சாண்டியுடன் போட்டியிட்ட ரேஷ்மா மற்றும் சரவணன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.மேலும் சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகையான ஸ்ருதி நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனரான சந்துரு இயக்க,அவரின் சகோதரியான ரமா தயாரிக்கவுள்ளார்.சதீஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் மைம்கோபி உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.மர்மமான முறையில் நடக்கும் கொலையின் பின்னணி மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து சாண்டி கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…