கடும் வெயில்,புயலில் நடுநடுங்க வைக்கும் இரவோடு போராடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!

Default Image

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு 45 மணி நேரத்திற்கு கொடுக்கப்பட்ட மணிக்கூண்டு டாஸ்க்கின் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர் .

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் . அந்த வகையில் நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான‌ டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து 45மணி நேரம் நடைபெறும் மணிக்கூண்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது .

இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நேரத்தை கணிப்பதற்காக ஐந்து அணிகளாக பிரிந்து விளையாடினார்கள். அதில் நிஷா , சனம் மற்றும் அனிதா ஆகியோர் ஒரு அணியாகவும் , பாலாஜி, சுச்சி மற்றும் ரம்யா ஆகியோர் ஒரு அணியாகவும், ரியோ, ஆரி மற்றும் கேபி ஆகியோர் ஒரு அணியாகவும் காலத்தை கணித்தார்கள் .

மேலும் அர்ச்சனா, சம்யுக்தா மற்றும் சோம் ஆகிய மூவரும் ஒரு அணியாகவும், ஆஜீத், ஷிவானி மற்றும் ரமேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும் விளையாடினார்கள் . 5 அணிகளும் நேற்று தங்களது முதல் கட்டத்தை முடித்ததுடன் இன்று இறுதி கட்டத்தை நெருங்குகிறார்கள் . கடும் மழை , இடி , மின்னல், துரத்தும் புயலுக்கும் இடையிலும் விளையாடும் பிக்பாஸ் போட்டியாளர்களில் காலத்தோடு போராடி வெல்ல போவது எந்த அணி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்