பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சேரன் உருக்கத்துடன் பதிவை வெளியிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா .இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் அதில் போட்டியாளரான சேரன் அவர்கள் லாஸ்லியாவை மகளாக நினைத்து அரவணைத்ததும்,அவரை லாஸ்லியா சேரப்பா என்று அழைத்ததும் பார்ப்பவர்களுக்கு அழகாக இருந்தது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா மட்டுமின்றி அவரது தந்தையான மரியநேசனும் மிகவும் பிரபலமானார் .தந்தை ,மகளின் பாசத்தை கண்டு அனைவரது கண்களிலுமே கண்ணீர் வந்தது என்றே கூறலாம்.அந்த வகையில் லாஸ்லியாவின் தந்தை இன்று திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது லாஸ்லியாவின் சேரப்பாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு ஆறுதலை தெரிவித்துள்ளார். அதில் லாஸ்லியா அவரது தந்தையின் மீது எத்தனை அன்பும் ,கனவும் வைத்திருந்தார் என்பது நன்றாக தெரியும்.இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படி தாங்குவாய் மகளே .சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் , குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை .எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…