சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.! அதுவும் இந்த பிரபல நடிகரின் மகனாமே.?
சிவகார்த்திகேயனின் டான் படத்தில் பிக்பாஸ் பிரபலமும் பிரபல நடிகரான ரியாஸ் கானின் மகனுமான ஷாரிக் ரியாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.அதனை தொடர்ந்து டான் படத்தில் முனீஷ்காந்த்,காளி வெங்கட் மற்றும் பாலா ஆகிய மூன்று காமெடி நடிகர்களும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி ,ஆர்ஜே விஜய் ஆகியோரும் டான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர் .
இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது டான் படத்தில் பிக்பாஸ் பிரபலமும் ,பிரபல நடிகரின் மகனுமான ஷாரிக் ரியாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் தமிழ், மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் குணச்சித்திர வேடங்களிலும் ,வில்லன் வேடங்களிலும் நடித்த ரியாஸ் கானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் டான் படத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.உண்மையெனில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.