ஓ மை கடவுளே பட நடிகையுடன் பிக்பாஸ் பாலாஜி.!
பிக்பாஸ் போட்டியாளரான பாலாஜி பிரபல நடிகை வாணிபோஜனுடன் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன்-4ல் விளையாட்டை சரியாக தந்திரத்தை பயன்படுத்தி விளையாடும் போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி. அவர் திமிராக மற்றவர்களிடம் பேசினாலும் அவருக்கென ரசிகர்கள் ஏராளம் உண்டு என்றே கூறலாம் . அதே நேரத்தில் அவர் செய்வது சிலருக்கு எரிச்சலையும் ஏற்படுத்துகிறது .அவர் விளையாட்டில் ஜெயிக்க பல தந்திரங்களை பயன்படுத்தி வருகிறார் . தவறோ சரியோ சத்தமாக பேசி மற்றவர்களின் வாயை அடைத்து விடுவார் .
தற்போது இவருக்கும், ஷிவானிக்கும் இடையே லவ் டிராக்கை தொடங்கி வைத்துள்ளார் பிக்பாஸ் . இந்த நிலையில் இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இவரது பழைய புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர் . அந்த வகையில் பாலாஜி பிரபல சீரியல் நடிகையும் ,ஓ மை கடவுளே, லாக்கப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வாணி போஜனுடன் இணைந்து நெருக்கமாக உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது .