பிக்பாஸ் ஆரவ் அவர்கள் நடிகை ராஹியை திருமணம் செய்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1 மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டினுள் ஓவியா மற்றும் ஆரவ் இருவரின் காதல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதனையடுத்து இருவருக்கும் பிரேக் அப் ஆனதாகவும் கூறப்பட்டது. மேலும் ஆரவ் தான் அந்த சீசனின் வெற்றியாளரும் கூட. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் சைத்தான், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் நிகழ்ச்சிக்கு பின்னர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனையடுத்து நடித்த ராஜாபீமா திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இமை போல் காக்க ஜோஷுவா படத்தில் நடிக்கும் ராஹியை திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இவர்களது திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. இதில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த ஜோடியாகும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…