“தி லாஸ்ட் கஸ்டமர்” பாலியல் தொழிலாளி தொடர்பான படத்தில் நடிக்கும் பிக்பாஸ் அபிராமி..!!

தி லாஸ்ட் கஸ்டமர் என்ற பாலியல் தொழிலாளி தொடர்பான படத்தில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற அபிராமி வெங்கடாச்சலம் நடிக்கவுள்ளார்.
நடிகை அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது படங்களில் மட்டும் நடித்து வராமல் சில வெப் சீரியஸில் நடித்துவருகிறார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஷேப் நேபாஜி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
முழுக்க முழுக்க பாலியல் தொழிலாளி தொடர்பான கதையை வைத்து எடுக்கப்படவுள்ள இந்த படத்தில் ஸ்வயம் சித்தா, சந்தோஷ் பிரதாப் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு தி லாஸ்ட் கஸ்டமர் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியானது.
It is time we #Speakup for #WomenWithoutAVoice. ‘The Last Customer’ sheds light on the hard lives of sex workers in India. @Actorsanthosh @iamswayamsiddha @AbhiramiVenkat3
@sherif_choreo @teamaimpr @prakash1729 @ActorAATHMA #thelastcustomer #endyourkashtangal #HappyWomensDay pic.twitter.com/E1CZFVVGCK— MagicTV-India (@Magictvindia) March 8, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025