அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் பைடன் அதிக வாக்குகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது .நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடேன் 264 சபை ஓட்டுகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது.டொனால்ட் ட்ரம்ப் 214 சபை ஓட்டுகளை பெற்றுள்ளார்.டிரம்ப் வெற்றி பெற 56 வாக்குகள் தேவைப்படுகிறது.
அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் பதவியை வெல்வதற்குத் தேவையான இடங்கள் 270 ஆகும். இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். அவர் 70 மில்லியனுக்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.அதாவது , ஜோ பைடன் இந்த தேர்தலில் 50.4% வாக்குகளை பெற்றுள்ளார்.இவர் பெற்ற வாக்குகள் 72,075,757 ஆகும்.இதுவரை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல்களில் முன்னாள் அதிபர் ஒபாமா பெற்ற வாக்குகள் தான் சாதனையாக இருந்து வந்தது.தற்போது அந்த சாதனைகளை பைடன் முறியடித்துள்ளார்.
கடந்த 2008 -ஆம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா 69,498,516 பெற்ற வாக்குகள் தான் சாதனையாக இருந்து வந்தது.தற்போது ஒபாமாவை விட பைடன் 2577241 வாக்குகள் பெற்றுள்ளார்.தற்போதைய தேர்தலை பொறுத்தவரை டிரம்ப் 47.97% வாக்குகள் பெற்றுள்ளார்.அதாவது 68,600,187 வாக்குகள் பெற்றுள்ளார்.இவரும் ஒபாமாவின் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் மூன்று மாநிலங்களில் வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…