“நான் அதிபரானால் 4 லட்சம் டாலர்களுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் மீது வருமான வரியை உயர்த்துவேன்” – ஜோ பைடன்
ஜோ பைடன் அதிபரானால், அமெரிக்காவில் ஆண்டுதோறும் 4 லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் மீது வருமான வரியை உயர்த்தப்போவதாக தெரிவித்தார்.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகம். இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 85 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் உடல் வலிமை, ஆரோக்கியம் அதிபர் டிரம்ப் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பைடன், 70 வயதுக்கு மேலானவர்கள் பற்றி இப்படி கேள்வி எழுப்புவது நியாயம் தான் எனக் கூறினார். மேலும், அங்குள்ள செய்தியாளர் ஒருவர், “அமெரிக்க அதிபரின் பதவி காலம் நான்கு ஆண்டுகள் என்பதால் ஒரு முறை மட்டுமே அதிபராக இருப்பீர்களா” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அவர் “அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு 8 ஆண்டுகள் அதிபராக பணியாற்றுவேன் என கூறிய அவர், நான் அதிபரானால் ஆண்டுதோறும் 4 லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் மீது வருமான வரியை உயர்த்தப்போவதாக தெரிவித்தார்.