பல்பை கண்டுபிடித்தது எடிசன் என்ற வெள்ளை மனிதர் அல்ல; கருப்பினத்தவர்.. ஜோ பிடன்.!
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் கொரோனா வைரஸையும் பொருட்படுத்தாமல் அதிபர் ட்ரம்ப், ஜோ பிடன் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை விஸ்கான்சின் கெனோஷாவிற்கு பயணம் செய்து அங்கு உள்ள கிரேஸ் லுத்தரன் சர்ச்சில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பேசினார்.
அப்போது, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆபிரிக்க, அமெரிக்க வாக்காளர்களை கவரும் முயற்சியில், பல்பை கண்டுபிடித்தது கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் தான், எடிசன் என்ற “வெள்ளை மனிதர்” அல்ல என்று கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.