தசை பிடிப்புக்கு பிறகு பயிற்சியில் களமிறங்கிய புவனேஷ் குமார் !
நடப்பு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி ஐந்து போட்டிகள் விளையாடி உள்ளது . அதில் பாகிஸ்தான் அணியுடன் நடந்த நான்காவது உலக கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தசைப்பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.
அந்தப் போட்டியில் புவனேஷ் குமார் 2.46 மட்டுமே பந்துவீசினார். அதன் பிறகு ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த போட்டியிலும் புவனேஷ் குமார் பங்கேற்கவில்லை , இந்நிலையை மான்செஸ்டரில் இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
அந்த பயிற்சியின் போது மருத்துவர்கள் மற்றும் கேப்டன் கோலி கண்காணிப்பில் புவனேஷ்குமார் எந்தவித சிரமமும் இல்லாமல் அரை மணி நேரம் பந்துவீசினார் . இந்நிலையில் இந்திய அணி நாளை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் பலப்பரீட்சை மோதவுள்ளது.
இப்போட்டியில் புவனேஷ்குமார் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அணி சார்பில் புவனேஷ் குமார் களமிறங்குவது பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.