வரலாற்றில் இன்று டிசம்பர் 03 போபால் விஷவாயு தாக்குதல்..!
டிசம்பர் 3, 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயு தாக்குதல் நடந்த நாள். மத்தியபிரதேஷ மாநிலம், போபாலில் நடந்த கொடூரம் சம்பவம். 1984ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் நாள், அங்குள்ள யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் உள்ள விஷவாயு கிடங்கில் உள்ள விஷவாயு கசீந்து, சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவியது.
இந்த விஷவாயு தாக்குதலில் மூச்சிதிணறல் ஏற்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல், விரைவாக சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மற்ற ஊர்களில் பரவியது. பரவிய சிறிது நேரத்தில், அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் பதறினர். ஒவ்வொருத்தரும் அலறியபடி நகரை விட்டு ஓடினர்.
மேலும், அங்குள்ள மருத்துவமனை முழுவதும் மக்கள் மற்றும் குழந்தைகள் கதறும் சத்தம் கேட்டது. இந்த சம்பவம் நடந்த 5 நாட்களில், இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அளவு 2500ஆக உயர்ந்தது. மேலும், 10000க்கும் மேற்பட்டோர் தங்களின் பார்வையை இழந்தனர். இதில் மரணமடைந்தோர், முக்கால்வாசி குழைந்தைகளே ஆகும். ஆயிரக்கணக்கானோர் உயிரை பறித்த போபால் விஷவாயு கசிவு நடைபெற்ற நாள்.. இன்று.