கர்ணன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜிற்கு முத்தம் கொடுத்த பவானி.!!
கர்ணன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜிற்கு நடிகர் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது மூன்றாவது நாளாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி படம் மிகவும் அருமையாக உள்ளது என்று கூறிவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை கட்டி அணைத்து கையில் முத்தம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Makkalselvan @VijaySethuOffl#Karnan watched the movie@mari_selvaraj pic.twitter.com/IHd2T9Tl4j
— ???????????????????????? ????.???????????????????????????? (@Bulletvikki) April 10, 2021
இந்த கர்ணன் திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகி பாபு, நட்டி நடராஜன், கௌரி கிஷன், லால் போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.