இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தமிழரசன். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், இளையராஜாவுடன் எனக்கு பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அவருடன் நிறைய படங்கள் பணியாற்றி உள்ளேன். எனது படங்கள் இன்றளவும் நிற்பதற்கு முக்கிய காரணம் படத்தின் இசை படத்தின் உயிர்நாடியாக இருப்பது தான். என் படம் இளையராஜாவின் இசையால் மட்டுமே பேசும். எந்த இடத்தில் இசை வர வேண்டும் அது எவ்வளவு சத்தமாக இருக்க வேண்டும் என்பதை சரியாக தீர்மானிப்பது அவர் மட்டுமே.
ஒன்றுமே இல்லாமல் படத்தினை கொடுத்தால் கூட தன் இசையால் படத்தை ரசிக்க வைத்து விடுவார் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரம் இளையராஜா. அவரை போல இன்னொரு கலைஞன் பிறந்து வருவது கஷ்டம். விஜய் ஆண்டனி பார்க்கும் போது சாதாரணமாக இருக்கிறார். ஆனால், படத்தில் வேறு விதமாக தெரிகிறார். விமான பயணம் செய்யும்போது அவரை நேரில் பார்த்தேன் நல்ல இசையமைப்பாளர் ஏன் நடிக்க வந்தார் என்று யோசித்திருக்கிறேன். என தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…