வதந்திக்கு முற்று புள்ளி வைத்த பாரதிராஜா.!
இயக்குனர் பாரதிராஜாவை தனிமை படுத்தியதாக வந்த வதந்தி செய்திகளுக்கு தற்பொழுது முற்று புள்ளி வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்யவும், கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லையென்றாலும் அவர்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுள்ளார். அங்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு கொரோனா அறிகுறி இல்லையெனினும் வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சமீபத்தில் சில செய்திகள் வெளியாகியது, அந்த வதந்தி செய்திகளுக்கு முற்றி புள்ளி வைக்கும் வகையில் பாரதி ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#StaySafeStayHome #COVID19 pic.twitter.com/GBEp4QcXMm
— Bharathiraja (@offBharathiraja) May 6, 2020